உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப பிரார்த்தனை செய்வோம் - சூர்யா வேண்டுகோள்
உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள், பாதுகாப்பாக தாயகம் திரும்ப அனைவரும் கூட்டு பிரார்த்தனை செய்வோம் என ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர்கள் சூர்யா, சத்யராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, உக்ரைனில் இந்திய மாணவர்கள் சிக்கியிருப்பது வேதனை அளிப்பதாக கூறினார்.
Comments