சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 616ரூபாய் உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 616 ரூபாய் உயர்ந்து, மீண்டும் 39ஆயிரத்தை எட்டியுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் காரணமாக, பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்திருக்கும் நிலையில், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதனால், தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 24-ந் தேதி இதுவரை இல்லாத வகையில் 39,608 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை அதற்கு பிறகு படிப்படியாக குறைந்தது.
இந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு 616 ரூபாய் உயர்ந்துள்ளது. அந்த வகையில், கிராம் தங்கம் 77 ரூபாய் உயர்ந்து, 4875 ரூபாய்க்கும், சவரன் தங்கம் 616 ரூபாய் அதிகரித்து 39000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு 1900 ரூபாய் அதிகரித்து 71,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Comments