உக்ரைன் பலமாக பதிலடி கொடுக்கும் என்று ரஷ்யா எதிர்பார்க்கவில்லை - அமெரிக்க ராணுவம்
உக்ரைன் பலமாக பதிலடி கொடுக்கும் என்று ரஷ்யா எதிர்பார்க்கவில்லை என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
கீவ் நகரைக் கைப்பற்ற ரஷ்யப் படைகள் முன்னேற விடாமல் கடும் எதிர்ப்பு காட்டும் உக்ரைன் படைகள் பயிற்சியின் காரணமாக வான் தாக்குதல்களின் போது விரைந்து செயல்படுகின்றன. ரஷ்யாவிடம் இன்னும் பயன்படுத்தப்படாத பெரும் படை பலம் உள்ளது. ஆனாலும் தொடக்கப் போரில் அது இத்தனை எதிர்ப்பை உக்ரைனிடம் எதிர்பார்க்கவில்லை.
இது தொடர்பாக பேசிய அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ரஷ்யப்படைகள் தங்கள் சொந்தப் பிரச்சினைகளுடன் கடுமையான சண்டையை எதிர்கொண்டு கிவ் நகரை கைப்பற்றுவது எளிதல்ல என்பதை உணர்கின்றனர்.5 நாட்களாக போர் நீடிக்கிறது என்ற போதும் ரஷ்யப் படைகள் எதிர்பார்த்த அளவுக்கு அது எளிதாக இல்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது
Comments