உக்ரைனுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்க உள்ளதாக உலக வங்கி தகவல்
உக்ரைனுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்க உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் உருக்குலைந்துள்ள உக்ரைனுக்கு நிதியுதவிகளை வழங்க சர்வதேச நாணய நிதியம், மற்றும் உலக வங்கி முன் வந்துள்ளன. உக்ரைனுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலரை நிதியுதவியாக வழங்குவதாகவும் 350 மில்லியன் டாலரை உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
சுகாதாரம் மற்றும் கல்விக்காக 200 மில்லியன் டாலரை உடனடியாக வழங்க இந்த வார இறுதிக்குள் மற்ற அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
Comments