மாஸ்டர் கார்டு, விசா நிறுவனங்கள் ரஷ்ய வங்கிகளுக்கு சேவை வழங்கப் போவதில்லை என அறிவிப்பு
ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்ட் அட்டை வழங்கும் அமெரிக்கா நிறுவனங்களான மாஸ்டர் கார்டு மற்றும் விசா கார்ட், இனி ரஷ்யாவிற்கு சேவைகளை வழங்கப் போவதில்லை என அறிவித்துள்ளன.
உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா திரும்பப் பெறாததை கண்டித்து அந்நாட்டு வங்கிகளுக்கு வழங்கி வந்த சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. அமெரிக்கா அறிவித்த பொருளாதார தடைகளில் ஒரு நடவடிக்கையாக மாஸ்டர் கார்டு மற்றும் விசா நிறுவனங்கள் தங்கள் சேவையை நிறுத்தி உள்ளன.
அதேநேரம் நிலை சீரானது மீண்டும் சேவை வழங்கப்படும் என மாஸ்டர்கார்டு தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளுக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்குவதாக விசா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments