எங்களின் ஒற்றுமையை யாராலும் உடைக்க முடியாது - உக்ரைன் அதிபர்
”எங்களின் ஒற்றுமையை யாராலும் உடைக்க முடியாது” என, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் காணொலி வாயிலாக உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskyy தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட இடங்களில், ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
மண்ணுக்காகவும், சுதந்திரத்திற்காகவும் உக்ரைன் மக்கள் உயிர் தியாகம் செய்து வருகின்றனர். எங்கள் ஒற்றுமையை உடைக்க முடியாது என பேசிய அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி பேச்சுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எழுந்து நின்று கைத் தட்டினர்.
Comments