கீவ் நகரை நோக்கிய படையெடுப்பில் கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவுக்கு தொய்வு - பிரிட்டனின் ராணுவ உளவு பிரிவு

0 2298

உக்ரைனின் கீவ் நகர் மீதான படையெடுப்பில் ரஷ்ய ராணுவம் கடந்த 24 மணி நேரத்தில் தொய்வை சந்தித்துள்ளதாக பிரிட்டனின் ராணுவ உளவு பிரிவு தெரிவித்துள்ளது.

ராணுவ தளவாடங்களை கீவ் நகரை நோக்கி எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக திட்டமிட்டபடி ரஷ்ய படையினரால் முன்னோக்கி நகர்ந்து செல்ல முடியாமல் போய் இருக்கலாம் என பிரிட்டன் ராணுவ உளவு பிரிவு தெரிவித்துள்ளது.

இதனால் பீரங்கிகள் மூலமும், ஏவுகணைகள் உள்ளிட்ட வான்வழி தாக்குதல் முறை மூலமாகவும் தாக்குலை தீவிரப்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக எச்சரித்துள்ளது.

இந்த தாக்குதல் மூலம் மக்கள் அதிகம் வாழும் கீவ், கார்கிவ், செர்னிகிவ் உள்ளிட்ட பகுதிகளை கைபற்ற ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகவும், உக்ரைனின் வான் எல்லையை கைப்பற்ற முடியாததால் , இரவு நேர தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகவும் பிரிட்டன் ராணுவ உளவு பிரிவு எச்சரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments