உக்ரைனுக்குள் நுழைந்த பெலாரஸ் படைகள் : ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனில் தாக்குதல்
ரஷ்ய நாட்டிற்கு ஆதரவாக உக்ரைனுக்குள் நுழைந்து பெரலாரஸ் படைகளும் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ள நிலையில், ரஷ்யாவிற்கு ஆதரவாக பெலாரஸ், படைகளை அனுப்ப வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்திருந்தார்.
இதற்கு பெலாரஸ் தரப்பில் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்நாட்டு ராணுவம் உக்ரைனின் வடக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அந்நாட்டின் செர்னிஹிவ் பகுதிக்குள் நுழைந்து பெலாரஸ் ராணுவம் தாக்குதலில் ஈடுபடுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டுள்ள பெலாரஸ் மீதும் உலக நாடுகள் பொருளாதார தடைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Comments