தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69ஆவது பிறந்தநாள்
திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 69வது பிறந்தநாளையொட்டி, அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள மறைந்த முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின், மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைதொடர்ந்து, சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்திற்கு சென்ற அவர், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, தனது மனைவியுடன் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற அவர் கலைஞரின் படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு தாயார் தயாளு அம்மாவிடம் ஆசி பெற்றார். அப்பொழுது, கோபாலபுரம் இல்லத்தின் எதிர் வீட்டில் உள்ள குடும்பத்தினரையும் சந்தித்து நலம் விசாரித்தார் .
அதைதொடர்ந்து, சிஐடி நகர் இல்லத்திற்கு சென்று ராஜாத்தியம்மாளை சந்தித்த மு.க.ஸ்டாலின் அவரிடமும் ஆசி பெற்றார்.
Comments