தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட் - இந்திய வானிலை மையம்
தமிழகத்தில் வரும் 3 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அந்தமான் கடற்கரை அருகே நிலவிவந்த வளிமண்டல சுழற்சி காரணமாக நேற்று தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், அது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று இலங்கை கடற்கரை அருகே நெருங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 3 ஆம் தேதி முதல் 5 தேதி வரை கனமழை தொடரும் என மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Comments