ஃபிஃபா, யுஇஎஃப்ஏ கால்பந்து கூட்டமைப்புகளில் இருந்து ரஷ்யா இடை நீக்கம்

0 4240

ஃபிஃபா எனப்படும் சர்வதேச கால்பந்து சம்மேளனமும், ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பும் தங்கள் அமைப்பிலிருந்து ரஷ்யாவை இடைநீக்கம் செய்துள்ளன.

இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், ரஷ்ய ஆண்கள் அணி அடுத்த மாதம் உலகக் கோப்பை பிளே-ஆஃப் போட்டிகளில் விளையாடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கோடைகால யூரோ 2022 போட்டியில் இருந்து ரஷ்ய பெண்கள் அணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இரு அமைப்புகளும் கூறியுள்ளன.

இதைத் தவிர ரஷ்ய எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோம் உடனான தனது ஸ்பான்சர்ஷிப்பை யுஇஎஃப்ஏ முடித்துக்கொண்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments