அணி சேரா நாடுகள் என்ற கொள்கையை மாற்றி உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க பின்லாந்து அரசு முடிவு
தங்களது கொள்கைக்கு மாற்றமாக உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பி வைக்கப் போவதாக பின்லாந்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்துப் பேசிய பின்லாந்து பாதுகாப்பு அமைச்சர் ஆண்டி கைக்கோனன், நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் உக்ரைனுக்கு 2,500 தாக்குதல் துப்பாக்கிகள், 1,50,000 தோட்டாக்கள், 1,500 பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் 70,000 உணவுப் பொதிகள் வழங்க உள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் 1956க்குப் பின் அணி சேரா நாடுகள் கொள்கையில் இருந்த பின்லாந்து தனது நீண்ட காலக் கொள்கையை ரத்து செய்வதாக கைக்கோனன் தெரிவித்துள்ளார்.
Comments