ரஷ்ய பீரங்கி வாகனத்தின் மீது ஏறிக் குதித்த உக்ரைன் இளைஞன் முழங்காலிட்டு திரும்பிச் செல்லுமாறு கண்ணீர் மல்க வேண்டுகோள் !
ரஷ்ய வீரர்கள் வந்த பீரங்கியில் ஏறிக் குதித்த உக்ரைன் இளைஞன் முழங்காலிட்டு திரும்பிச் செல்லுமாறு கூறினான்.
கிரீமியா அருகே உள்ள பகுதியில் நுழைந்த ரஷ்ய ராணுவ பீரங்கிகளைக் கண்ட உக்ரைன் இளைஞன் ஓடிச் சென்று பீரங்கி மீது தாவிக் குதித்து ஏறினான். பின்னர் அதற்கு முன்னால் குதித்து பீரங்கியை நிறுத்துமாறு கூறினான். இறுதியில் பீரங்கிகளுக்கு முன் முழங்காலிட்டு ரஷ்யப் படைகளை திரும்பிச் செல்லுமாறு கண்ணீருடன் வேண்டிக் கொண்டார்.
அந்த இளைஞரின் இந்தச் செயல் உக்ரைனின் 2வது தியானமென் சதுக்க நினைவுகளை மனதில் ஏற்படுத்தி உள்ளதாக அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.
Comments