ரஷ்யக் குடிமக்கள் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்ப புதின் அரசு தடை
ரஷ்ய நாணயமான ரூபிள் வீழ்ச்சி அடைந்ததை அடுத்து மக்கள் வெளிநாட்டு பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ள ரஷ்ய அரசு தடை விதித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை கண்டித்து பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை அறிவித்துள்ளன. இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரஷ்யா நாணயமான ருபிள் வீழ்ச்சி அடைந்தது. இதையடுத்து நாணய மதிப்பின் வீழ்ச்சியை சரிகட்ட இனி ரஷ்ய மக்கள் வெளிநாட்டு பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள அதிபர் புதின் தடை விதித்துள்ளார்.
மேலும் ரஷ்ய முதலீட்டாளர்கள் தங்களது 80 சதவீத வருவாயை ரஷ்ய நாணயத்தின் ரூபிளில் வைத்திருக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
Comments