படைகளை வாபஸ் பெற வேண்டும்: ரஷ்யாவிற்கு உக்ரைன் வலியுறுத்தல் !

0 1966

பெலாரஸ் நாட்டில் ரஷ்யா - உக்ரைன் இடையே சுமார் மூன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், தங்கள் நாட்டுக்குள் ஊடுருவிய படைகளை ரஷ்யா வாபஸ் பெற வேண்டுமென உக்ரைன் வலியுறுத்தியுள்ளது. இரு நாடுகளும் அடுத்த கட்டமாக போலந்து, பெலாரஸ் எல்லையில் உள்ள நகரில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளன.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து 5வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய படைகள் தீவிர தாக்குதலை முன்னெடுத்து வருகின்றனர். உக்ரைன் ராணுவமும் தங்கள் நாட்டை பாதுகாக்கும் நோக்கில் நட்பு நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவை முன்னேற விடாமல் தடுத்து தீவிரமாக போரிட்டு வருகின்றனர். இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்புகளும் மற்றும் பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் இரு நாடுகளும் போரை நிறுத்திவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் வலியுறுத்தினார்கள். அதனை தொடர்ந்து, பெலாரஸ் நாட்டில் ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த நிலையில், அங்கு பேச்சுவார்த்தை நடைபெறுவதை விரும்பவில்லை என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அறிவித்திருந்தார். அதனை அடுத்து, பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோ உள்ளிட்டோருடன் செலன்ஸ்கி கலந்துரையாடியதை அடுத்து பேச்சுவார்த்தையில் பங்கேற்க முன்வருவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் அரசு தனது பிரதிநிதிகளை பெலாரசின் கோமல் பகுதிக்கு அனுப்பியது. அந்த குழுவினர் ரஷ்ய நாட்டின் பிரதிநிதிகளுடன் சுமார் மூன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், தஙகள் நாட்டுக்குள் ஊடுருவிய படைகளை ரஷ்யா வாபஸ் பெற வேண்டுமென்றும், முழுமையாக படைகளை விலக்க வேண்டுமென்றும் உக்ரைன் வலியுறுத்தி உள்ளது. மேலும், கிரீமியாவில் இருந்தும் ரஷ்யா படைகளை விலக்க வேண்டும் என உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments