ரஷ்யா - உக்ரைன் போரை அமெரிக்கா தடுக்கத் தவறியதாக டிரம்ப் குற்றச்சாட்டு
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை தடுக்கத் தவறியது அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் கையாளாகதத் தனத்தை காட்டுவதாக முன்னாள் அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
பொதுகூட்டம் ஒன்றில், ரஷ்ய அதிபர் புடினின் போர் தந்திரங்களை டிரம்ப் வெகுவாகப் பாராட்டினார். பல்வேறு உலக நாடுகள் புடினுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், டிரம்ப் இவ்வாறு பேசியது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதி செய்த டிரம்ப், புடின் புத்திசாலியாக இருப்பதில் பிரச்சனை இல்லை என்றும், அமெரிக்க தலைவர்கள் முட்டாள்களாக உள்ளதாகவும் சாடினார்.
மேலும் தனது ஆட்சியில் அமெரிக்கா பலம் பொருந்திய நாடாக விளங்கியதால் உலகில் அமைதி நிலவியதாக அவர் தெரிவித்தார்.
Comments