ரஷ்யா மீதான தடைகள் 3ஆம் உலகப் போருக்கு வித்திடும் - பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோ
ரஷ்யாவின் மீது மேற்கு நாடுகள் விதிக்கும் கடுமையான பொருளாதாரத் தடைகள் மூன்றாம் உலகப் போருக்கு வித்திடும் என பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 5ஆம் நாளை எட்டியுள்ள நிலையில், ரஷ்யாவிற்கு ஆதரவாக பெலாரஸ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இக்கட்டான தருணத்தில் ரஷ்யா மீது அத்தகைய தடைகள் விதிப்பது போரை விட மோசமானது என்றும் பெலாரஸ் அதிபர் தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய சூழலில் அமெரிக்கா தான் அதிகம் பயனடைவதாக குறிப்பிட்ட அவர், நாம் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனிடையே, ரஷ்யாவுடன் இணைந்து பெலாரசும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தாது என்றும் தங்கள் பிராந்தியத்தில் இருந்து ஏவுகணைகள் ஏதும் ஏவப்படவில்லை என்றும் அதிபர் லுகாஷென்கோ குறிப்பிட்டுள்ளார்.
Comments