உக்ரைன் நாட்டில் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கூகுள் மேப் சேவையில் சில கட்டுப்பாடுகள் விதிப்பு.!
ரஷ்ய படைகளுக்கு உதவாமல் இருக்க உக்ரைன் நாட்டில் கூகுள் மேப் சேவையில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையே தொடர்ந்து 5ஆவது நாளாக போர் நடைபெறும் நிலையில், உக்ரைனில் ராணுவ தளங்கள் மற்றும் போர் தளவாடங்களை அழித்து ரஷ்ய படைகள் முன்னேறி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கூகுள் மேப் தளத்தில் நிகழ்நேர போக்குவரத்து நிலைமையை கண்டறியும் வசதி உக்ரைனில் தற்காலிகமாக செயலிழக்கவைக்கப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்டுபிடிக்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் அரசிடம் பேசி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட கூகுள் நிறுவனம், ரஷ்ய தாக்குதல்களை தடுப்பதற்கு இது உதவும் என கூறியுள்ளது.
Comments