கோவில் திருவிழாவில் பக்தரின் தலையில் தீ மூட்டி, பொங்கல் வைத்து நூதன வழிபாடு
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் பக்தர் ஒருவரது தலையில் தீமூட்டி பொங்கல் வைத்து நூதன வழிபாடு நடைபெற்றது.
சேப்பாக்கம் கிராமத்தில் அங்காளம்மன் கோவில் திருவிழா நடைப்பெற்றது. நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட திருவிழாவில் பம்பை இசைக்கு ஏற்ப ஆண், பெண் பக்தர்கள் அருள் வந்து ஆடினர்.
விழாவில் வயதான பக்தர் ஒருவரின் தலையில் சும்மாடு வடிவில் துணியைச் சுற்றி, அதன் மேற்பரப்பில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து, அதன் மீது சில்வர் பாத்திரத்தை வைத்து பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்கியதும் அதனை பல்வேறு வேண்டுதல்களோடு வந்தவர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.
Comments