கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்த மாநில அரசுகளுக்கு ரூ .1 லட்சம் கோடி நிதியுதவி வழங்கப்படும் - பிரதமர் அறிவிப்பு

0 2348

கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்த மாநில அரசுகளுக்கு ஒரு இலட்சம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இணையவழிக் கருத்தரங்கில் பேசிய அவர், அரசின் பல்வேறு துறைகளின் உட்கட்டமைப்புத் திட்டமிடல், செயல்படுத்துதல், கண்காணிப்பு ஆகியவற்றைப் பிஎம் கதிசக்தி ஒருங்கிணைக்கும் எனத் தெரிவித்தார்.

தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே, விமான நிலையம், நீர்வழிகள், புதுப்பிக்கவல்ல எரியாற்றல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான முதலீடுகளை அரசு அதிகரித்துள்ளதாகவும், இதன் விளைவாகக் கிடைக்கும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்ற துறைகளின் பொருளாதார உற்பத்தித் திறனுக்கு ஊக்கமளிக்கும் என்றும் தெரிவித்தார்.

உட்கட்டமைப்பு வளர்ச்சியை விரைவுபடுத்துவது நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் எனத் தெரிவித்தார்.

சிறு குறு நடுத்தரத் தொழில்நிறுவனங்களை ஏற்றுமதியில் உலக அளவில் போட்டியிடும் வகையில் உருவாக்கவும் பிஎம் கதிசக்தி உதவும் எனப் பிரதமர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments