ரஷ்யாவுடன் இணைந்து பெலாரசும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தக்கூடும் - அமெரிக்க உளவுத்துறை நிறுவனம் தகவல்.!
ரஷ்யாவுடன் இணைந்து பெலாரசும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்க உளவுத்துறை நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
சோவியத் யூனியனில் உறுப்பினராக இருந்த பெலாரஸ், உக்ரைன் - ரஷ்யா இடையேயான விவகாரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது.
பெலாரஸ், போருக்கு முன் ரஷ்ய படைகள் தங்கள் நாட்டில் தங்கிக் கொள்ள அடைக்கலமும் கொடுத்திருந்தது. இந்த நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு நேரடியாக ஆதரவளிக்கும் வகையில் பெலாரஸ் தனது படையை களமிறங்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக ரஷ்யா - உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தையும் இன்று பெலாரசில் நடைபெற உள்ள நிலையில், அந்த பேச்சுவார்த்தையில் வரும் முடிவுகளை பொறுத்து பெலாரஸ் உக்ரைனுக்குள் படைகளை களமிறக்கும் என சொல்லப்படுகிறது.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் ஐந்தாவது நாளாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Comments