ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணி - சென்னையில் நாளை முதல் தொடக்கம்
மின்சாரத் துறை ஊழியர்கள் ஒவ்வொரு முறையும் நேரடியாக வீடுகளுக்கு சென்று மின் கணக்கீட்டை பதிவு செய்வதற்கு பதிலாக மென்பொருள் மூலம் மின் கணக்கெடுப்பை எடுக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணிகள் சென்னையில் தொடங்க உள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
மின் கணக்கெடுப்பு தேதி வரும்போது நேரடியாக மின் நுகர்வோரின் செல்போன்களுக்கு மின் நுகர்வின் தகவலை குறுஞ்செய்தியாக அனுப்பும் வகையில் ஸ்மார்ட் மீட்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தியாகராயர் நகரில் முதற்கட்டமாக 90 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர்கள் சோதனை அடிப்படையில் பொருத்தப்பட உள்ளதாகவும், திட்டத்திற்கான வரவேற்பை பொருத்து தமிழகம் முழுவதும் 2026-ஆம் ஆண்டுக்குள் 3 கோடியே 60 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும் எனவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments