போரில் சில வீரர்களை இழந்ததாக முதன்முறையாக ஒப்புக் கொண்ட ரஷ்யா.!
உக்ரைனுக்கு எதிரான போரில் தங்கள் தரப்பிலும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா ஐந்தாவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இதுவரை ரஷ்ய தரப்பில் எத்தனை வீரர்கள் உயிரிழந்தனர் என்ற தகவலை ரஷ்யா வெளியில் சொல்லாமல் அமைதி காத்து வந்தது.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஷ்ய ராணுவ செய்தி தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ், போர் களத்தில் ரஷ்ய வீரர்கள் தைரியத்துடனும், வீரத்துடனும் செயல்பட்டு வருவதாகவும், இருப்பினும், துர்தர்ஷ்டவசமாக தங்கள் வீரர்களும் போரில் உயிரிழந்திருப்பதாகவும் கூறினார்.
வியாழக்கிழமையன்று உக்ரைனில் படையெடுப்பை தொடங்கியதில் இருந்து முதன்முறையாக போரில் வீரர்களை இழந்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
மேலும், போரின் போது தங்களிடம் சரணடையும் உக்ரைனிய போர்க்கைதிகள் மீண்டும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார்.
Comments