ரஷ்யா மீதான பொருளாதார தடை- அழுத்தத்தில் ரஷ்ய வங்கிகள்?
ரஷ்யா மீது பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், ரஷ்யாவின் வங்கிகள் அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா , பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை அறிவித்த பிறகு, அமெரிக்க டாலருக்கு எதிரான ரஷ்ய நாணயமான ரூபிளின் மதிப்பு இதற்கு முன் இல்லாத அளவாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசிய வர்த்தகத்தில் சரிவை சந்தித்த ரூபிளின் மதிப்பு ஒரு கட்டத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக 40 சதவீதம் வரை குறைந்து, 119 ரூபிள் வரை சரிந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், ரஷ்யாவில் ரூபிள் நோட்டுகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் என நினைத்து மக்கள் ஏடிஎம்களிலும் வங்கிகளிலும் பணம் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
Comments