உக்ரைனை தாக்க அலைஅலையாய் செல்லும் ரஷ்ய போர் துருப்புகள்.. செயற்கை கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியீடு.!

0 4052

உக்ரைன் மீது ரஷ்ய போர் துருப்புகள் அலைஅலையாக தாக்கும் வகையில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணி வகுத்து செல்லும் செயற்கை கோள் படம் வெளியாகி உள்ளது.

Kyiv நகரில் இருந்து 64 கிலோ மீட்டர் தொலைவில் டாங்கிகள் உள்ளிட்ட இந்த படைகளின் அணிவகுப்பு நீண்ட வரிசையுடன் காணப்படுவதாக இதனை வெளியிட்ட அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் கூறியுள்ளது. 

நூற்றுக்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ வாகனங்கள் 5கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்டு காணப்படுவதாக செயற்கை கோள் புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளது.

Ivankiv நகரத்தின் வடகிழக்கே இந்த வாகன அணிவகுப்பில் எரிபொருள், தளவாடங்கள் மற்றும் டாங்கிகள், காலாட்படை போர் வாகனங்கள் மற்றும் சுயமாக இயக்கப்படும் பீரங்கி உள்ளிட்ட கவச வாகனங்கள் இருப்பதை அந்த புகைப்படங்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments