உக்ரைனில் உள்ள இந்தியர்களை 10 பேருந்துகள் மூலம் மீட்க நடவடிக்கை - இந்திய தூதரக அதிகாரிகள்

0 1375

உக்ரைன் எல்லையில் உள்ள இந்தியர்களை 10 பேருந்துகள் மூலம் மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வார்சாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை போலந்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. உக்ரைன் எல்லையான Shehyni பகுதியில் இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் பாதுகாப்பு கருதியும் 10 பேருந்துகள் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மற்ற எல்லைகள் வழியாக தூதரகம் தயார்படுத்தியுள்ள குடியிருப்புகளில் இந்தியர்கள் தங்கவைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தூதரக கட்டுப்பாடு அறையை தொடர்பு கொண்டு பேருந்தில் இருக்கைகளை உறுதி செய்யுமாறு தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

அதற்கான தொலைபேசி மற்றும் வாட்ஸ் அப் எண்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். மேலும் Lviv மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள இந்தியர்கள் அங்கேயே பத்திரமாக இருக்குமாறு தூதரக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments