ரஷ்ய விமானங்கள் தங்கள் வான்பரப்பில் பறக்க பல்வேறு ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து கனடாவும் தடை..!

0 1742

ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து தங்கள் வான்பரப்பில் ரஷ்ய விமானங்கள் பறக்க, கனடாவும் தடை விதித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எஸ்டோனியா, ருமேனியா, லிதுவேனியா, லாத்வியா, ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே ரஷ்ய விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன.

இந்நிலையில் கனடாவின் போக்குவரத்துத் துறை அமைச்சர் உமர் அல்காப்ரா விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், உக்ரைனுக்கு எதிரான தாக்குதலுக்கு ரஷ்யாவைப் பொறுப்பேற்கச் செய்யும் வகையில் இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments