உக்ரைனின் உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம் ரஷ்யாவின் தாக்குதலில் எரிந்து நாசம்.!
உலகின் மிகப்பெரிய விமானமாக அறியப்பட்ட தங்கள் நாட்டு சரக்கு விமானத்தை ரஷ்ய படை தாக்கி அழித்துள்ளதாக உக்ரைன் வேதனை தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ஐந்தாவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, தலைநகர் கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு அருகே தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
அதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், தலைநகர் கிவ் அருகே Hostomel விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு விமானத்தை ரஷ்ய படை தகர்த்து அழித்துவிட்டதாக உக்ரைன் கூறியுள்ளது.
இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பதிவிட்டுள்ள ட்விட்டரில், உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமாக அறியப்பட்ட, உக்ரைனிலேயே தயாரிக்கப்பட்ட AN-225 மிரியா சரக்கு விமானம் ரஷ்ய படையால் தாக்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.
மேலும், விமானத்தை அழித்திருந்தாலும், வலுவான, சுதந்திரமான மற்றும் ஜனநாயக உக்ரைன் அரசு உருவாவதை அவர்களால் ஒருபோதும் அழிக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.
Comments