ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளியிடங்களில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என அறிவிப்பு
ஐக்கிர அரபு அமீரகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அங்கு வெளியிடங்களில் முகக் கவசம் அணியத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ள நிலையில், முழுமையாக தடுப்பூசி செலுத்தி நாட்டிற்குள் வருவோருக்கு கொரோனா பரிசோதனை சான்று அவசியமில்லை என அந்நாட்டின் அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், பொருளாதாரம் மற்றும் சுற்றுலா சார்ந்த இடங்களில் தனி மனித இடைவெளி கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படுவதாக குறிப்பிட்ட அந்த ஆணையம், உள்ளரங்கு போன்ற இடங்களில் மட்டும் கட்டாயம் முகக் கவசம் அணிய அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல், கொரோனா பாதித்தோருடன் தொடர்பில் உள்ளோருக்கு கட்டாயத் தனிமை தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments