உக்ரைன் பெண் ஒருவரின் வீடு ரஷ்ய ராணுவத்தால் தாக்கப்பட்டு தீக்கிரையான நிலையில், அவர் மனவேதனையில் புதினுக்கு நன்றி தெரிவித்த வீடியோ.!
உக்ரைனைச் சேர்ந்த பெண் ஒருவரின் வீடு ரஷ்ய ராணுவத்தால் தாக்கப்பட்டு தீக்கிரையான நிலையில், அவர் கோபத்தில் வஞ்சப்புகழ்ச்சியோடு புதினுக்கு நன்றி தெரிவிக்கும் வீடியோ அதிகம் பகிரப்படுகிறது.
ரஷ்ய ராணுவம் உக்ரைனின் பல இடங்களில் தாக்குதல் நடத்தி வருவதால், மக்கள் தங்களின் வாழ்விடங்களை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைன் பெண் ஒருவரின் வீடு தீப்பற்றி எரிந்த நிலையில், வீட்டை இழந்த மனவேதனையில் இருந்த அவர் வீடியோ ஒன்றை எடுத்து மிக்க நன்றி புதின் எனக்கூறினார்.
மேலும் இப்போது தான் குளிருக்கு நன்றாக இருப்பதாகவும், இந்த உதவிக்கு நன்றி என்றும் அப்பெண் அதிபர் புதினை வஞ்சப் புகழ்ச்சியோடு விமர்சித்தார்.
Comments