பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்
பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக ரஷ்ய அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உக்ரைனை தாக்க பெலாரஸ் நாட்டை ரஷ்யா பயன்படுத்துவதால் அங்கு பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும், அதற்கு பதில் வேறொரு இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினால் அதில் பங்கேற்க தயார் என்றும் அதிபர் செலன்ஸ்கி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோவுடன் உக்ரைன் அதிபர் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்தே பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், பெலாரசின் கோமல் நகருக்கு தங்கள் பிரதிநிதிகளை உக்ரைன் அனுப்பவுள்ளதாகவும் ரஷ்ய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Comments