ரஷ்ய விமானங்கள் தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்த தடை - பெல்ஜியம் அரசு
ரஷ்ய விமானங்கள் தங்கள் வான் பரப்பில் பறக்க தடை விப்பதாக ஜெர்மனி, பெல்ஜியம், இத்தாலி, டென்மார்க், பின்லாந்து, நெதர்லாந்து, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏற்கனவே எஸ்டோனியா, ருமேனியா, லிதுவேனியா மற்றும் லாத்வியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரஷ்ய விமானங்களுக்கு தடை விதித்துள்ள நிலையில், தற்போது மேலும் சில நாடுகள் ரஷ்ய விமானங்களுக்கான் தடையை அமல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளன.
ரஷ்யாவுடன் 1300 கிலோ மீட்டருக்கு எல்லையை பகிர்ந்து கொள்ளும் அதன் அண்டை நாடான பின்லாந்துவும், ரஷ்யா விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. கிட்டத்தட்ட ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள பெரும்பாலான நாடுகள் ரஷ்ய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன.
Comments