சர்வதேச பணப்பரிவர்த்தனை தளத்தில் இருந்து ரஷ்யாவை நீக்க அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் முடிவு..
சர்வதேச பணப்பரிவர்த்தனை தளத்தில் இருந்து ரஷ்யாவை நீக்க அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் முடிவு செய்துள்ளன.
ஏற்கனவே ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச பண பரிவர்த்தனை தளமான சுவிப்ட் (SWIFT) தளத்தில் இருந்து ரஷ்யாவை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் வங்கியில் இருந்து மற்றொரு நாட்டின் வங்கிக்கு பாதுகாப்பாக பணப்பரிவர்த்தனை செய்ய உதவும் சுவிப்ட் தளம் தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் 11ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கிகளால் பயன்படுத்தப்படுகிறது.
அமெரிக்காவுக்கு பிறகு சுவிப்ட் தளத்தை அதிகளவில் பயன்படுத்தும் நாடாக இரண்டாவது இடத்தில் இருக்கும் ரஷ்யாவில், 300க்கும் மேற்பட்ட வங்கிகள், நிதி நிறுவனங்கள் இந்த சேவையை பயன்படுத்துகின்றன.
இந்த நடவடிக்கை ரஷ்யாவின் சர்வதேச எல்லை தாண்டிய பண பரிவர்த்தனைக்கு பாதிப்பை உண்டாக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், ரஷ்யாவின் ஏற்றுமதி, இறக்குமதிக்கான பணப்பரிவர்த்தனையை தடுப்பதோடு, ரஷ்யாவில் விநியோகத்தையும் பாதித்து விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது.
Comments