பதவியேற்பதற்கு முன்பாகவே வாக்குறுதியை நிறைவேற்ற துவங்கிய பெண் கவுன்சிலர்..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 9-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெண் கவுன்சிலர் பதவியேற்பதற்கு முன்பாகவே வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சாக்கடை தூய்மைப்பணிகளை செய்து வருவது பலரது வரவேற்பை பெற்றுள்ளது.
வாக்கு சேகரிக்க சென்ற போது ஒரு வார்டு பகுதியில் சாக்கடை வடிகால் தூய்மையின்றி இருப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக அதிமுக சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் தேவசேனாவிடம் பொதுமக்கள் கூறியிருந்தனர்.
தான் வெற்றி பெற்றவுடன் முதல் பணியாக சாக்கடை வடிகால்களை தூய்மையாக்குவேன் என அவர் உறுதியளித்திருந்த நிலையில், பதவியேற்பதற்கு முன்பாக அந்த பணிகளை அவர் துவங்கியுள்ளார்.
Comments