தாம் அதிபராக இருந்திருந்தால் உக்ரைன் - ரஷ்யா இடையே இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.. ஜோ பைடன் திறமையற்று இருப்பதாக டிரம்ப் குற்றச்சாட்டு
தாம் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக இருந்திருந்தால், உக்ரைன் - ரஷ்யா இடையே இந்த நிலைமை ஒருபோதும் ஏற்பட்டிருக்காது என முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
புளோரிடாவில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் பேசிய அவர், தனது தலைமையிலான ஆட்சியில் அமெரிக்கா சக்தி வாய்ந்ததாகவும், வலுவாகவும் இருந்ததால் உலக மக்களும் அமைதியாக இருந்ததாக குறிப்பிட்டார்.
தாம் அதிபராக இருந்த போது அமெரிக்காவின் கருத்துக்களை ரஷ்யா மதித்ததாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். தற்போது ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் பலவீனமாகவும், திறமையற்றும் இருப்பதாகவும் சாடிய ட்ரம்ப், இந்த திறமையற்ற நிர்வாகம் தான் உக்ரைனின் இந்த நிலைமைக்கு வழிவகுத்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், தாம் மட்டும் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் இந்த பேரழிவு ஒருபோதும் நடந்திருக்காது, நடந்திருக்கவிடமாட்டேன் எனவும் டிரம்ப் கூறியுள்ளார்.
Comments