உ.பி.யில். 5ஆம் கட்ட வாக்குப்பதிவு.. ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களிக்கும் மக்கள்..
உத்தரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தலுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆவர்முடன் வரிசையில் நின்று வாக்கு செலுத்தி வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 231 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில், இன்று 61 தொகுதிகளுக்கு, 5வது கட்டமாக வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
மொத்தம் 692 வேட்பாளர்கள் இன்றைய தேர்தலில் களம் காண்கின்றனர். 12 மாவட்டங்களில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அமேதி, ரேபரேலி, சுல்தான்பூர், சித்ரகூட், பிரதாப்கர், பிரயாக்ராஜ், அயோத்தி மற்றும் கோண்டா உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ளூர் போலீசாருடன், துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மயூரா Kaushambi பகுதியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். இவர் Sirathu தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார்.
உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் Gayatri Prajapati மனைவி மஹாராஜி, அமேதி தொகுதியில் போட்டியிடும் நிலையில் தனது வாக்கினை பதிவு செய்தார். மேலும், அமைச்சர்கள், எம்.பி,க்கள் உள்ளிட்டோரும் ஆர்வமுடன் வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்தனர்.
Comments