உறையவைக்கும் குளிரிலும் இந்தோ - திபெத் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீடியோ
ஹிமாச்சல பிரதேசத்தில் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவும் உயரமான மலைப்பகுதியில் இந்தோ - திபெத் எல்லைக் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
ஹிமாச்சல பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் பனிபடர்ந்து காணப்படுகிறது.
இத்தகைய சூழலில், சுமார் 14 ஆயிரம் அடி உயர மலைப்பகுதியில் மைனஸ் 20 டிகிரி குளிரில் நடந்து சென்று இந்தோ திபெத் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உறையவைக்கும் பனியிலும் தடைகளை பொருட்படுத்தாது அயராது உழைக்கும் எல்லைக் காவல் படையினரின் வீடியோ வைரலாகி வருகிறது.
#WATCH | 'Himveers' of the Indo-Tibetan Border Police (ITBP) patrolling the borders in snowfall at an altitude of 14,000 feet in Himachal Pradesh at -20 degrees Celsius.
(Source: Indo-Tibetan Border Police) pic.twitter.com/UBP2KjULPj
Comments