டெல்லியில் தங்கள் சொந்த வாகனங்களில் பயணம் செய்யும் போது முகக் கவசம் அணிய வேண்டிய கட்டாயமில்லை என்று அறிவிப்பு

0 2070

டெல்லியில் சொந்த கார்கள் வைத்திருப்போர், தங்கள் வாகனங்களில் பயணம் செய்யும் போது முக ககவசம் அணிய வேண்டிய கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் தலைமையிலான டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவின் படி,  வாடகை கார்கள், டாக்சிகள் மற்றும் இதர வாடகை வாகனங்களில் பயணம் செய்வோர் கட்டாயம் முக ககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தளர்வு நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாததற்கு விதிக்கப்பட்ட அபராதம் 500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments