இலங்கைக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

0 4002

இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை வென்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது.

இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிசங்கா 75 ரன்களை எடுத்தார்.

இதனை அடுத்து, பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர், ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர் - ஜடேஜா இணை அபாரமாக விளையாடி அணி வெற்றி பெற உதவினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments