மும்பையில் புதிய திரைப்படத்தை பிரபலப்படுத்த சாலைகளில் வலம் வந்த ஆலியா பட்

0 4565

மும்பையில் ரிலீசான புதிய இந்திப்படம் கங்குபாய் காத்தியாவாடியை ரசிகர்கள் மத்தியில் அறிமுகம் செய்ய நடிகை ஆலியா பட் கூரை இல்லாத திறந்த பேருந்து மூலம் மும்பையின் சாலைகளில் வலம் வந்தார்.

இறுதியாக படம் திரையிடப்படும் ஒரு திரையரங்கில் அவருடைய பயணம் நிறைவு பெற்றது. அவருடன் படக்குழுவினரும் கலந்துக் கொண்டனர்.

மும்பை சிவப்பு விளக்குப் பகுதியான காமதிபுராவில் ஒரு சாதாரண பாலியல் தொழிலாளி மாஃபியா ராணியாக விஸ்வரூபம் எடுக்கும் சுயசரிதை பாணியிலான படம் இது.

கடும் சர்ச்சைகளுக்கு இடையில் படம் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments