அடுத்த 5 ஆண்டுகளில் 1600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஆயுஷ்மான் சுகாதார டிஜிட்டல் திட்டம்… மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அடுத்த 5 ஆண்டுகளில் 1600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஆயுஷ்மான் சுகாதார டிஜிட்டல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சாமான்ய மக்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சைகள் வழங்குவதற்கான இணைய சேவையை விரிவுபடுத்த மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் என்று அழைக்கப்படுகிறது. மருத்துவ சிகிச்சைகள் தொடர்பான இணைய ஒருங்கிணைப்பு கடந்த ஆண்டுகளில் மிகுந்த பலன் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கோ-வின் , ஆரோக்கிய சேது, இ சஞ்சீவினி போன்ற அரசின் சுகாதார இணைய செயலிகள் மூலம் பல லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.இப்புதிய திட்டத்தின் கீழ் இணைவெளியில் சிகிச்சை பெறுவோரின் தகவல்கள் இணைக்கப்பட்டு பராமரிக்கப்படும்.
தொடர்ந்து அவர்கள் பெறும் சிகிச்சை மற்றும் உடல் நலம் தொடர்பான தகவல்கள் பதிவேற்றப்படும். இதனை மருத்துவமனைகள் பயன்படுத்தி உரிய சிகிச்சையை வழங்க உதவும்.
Comments