நீதித்துறைக்கு மத்திய அரசின் நிதியை விட, கூடுதலான உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனமே அவசரத் தேவை -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
நீதித்துறைக்கு மத்திய அரசின் நிதியை விட, கூடுதலான உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனமே அவசரத் தேவையாக உள்ளது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார், டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் காலியிடங்களை உடனடியாக நிரப்புமாறு கோரிக்கை விடுத்தார்.
அதுமட்டுமின்றி நீதிபதிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நீதித்துறைக்கு நிதி ஒதுக்குவது மட்டும் போதாது.
மத்திய அரசு நீதித்துறையை மேம்படுத்தவும் வேண்டும் என்று கேட்டுக்கொண்ட தலைமை நீதிபதி, பல்வேறு நீதித்துறை உள்கட்டமைப்பு வசதிகள் அடிப்படை வசதிகளாகக்கூட இல்லை என்று சுட்டிக்காட்டினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நீதிபதிகள் பலர் கலந்து கொண்டனர்
Comments