கார்பன் உமிழ்வு இல்லாத விமானத் தயாரிப்பில் ஏர்பஸ் மும்முரம்!
கார்பன் உமிழ்வு இல்லாத முதல் விமானத்தை தயாரிக்கப் போவதாக ஏர்பஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
பிரான்ஸ் விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் நிறுவனம் தனது ஏ380 ஜெட்லைனர் விமானத்தில் சில மாற்றங்களைச் செய்து வருவதாகவும், ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் விமானங்களை இயங்கச் செய்யும் ஆய்வுகள் நடந்து வருவதாகவும் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கார்பன் உமிழ்வு முற்றிலும் இல்லாத மற்றும் புகையற்ற விமானங்களை வரும் 2035ம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments