'ஓசி' பிரியாணி, மாமூல் கேட்டு அட்டகாசம் செய்த ரௌடி கைது

0 3218
சென்னை கொளத்தூரில் மாமூல் கேட்டு உணவகத்தை ரௌடி ஒருவன் அடித்து நொறுக்கி, கொலை மிரட்டல் விடுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சென்னை கொளத்தூரில் மாமூல் கேட்டு உணவகத்தை ரௌடி ஒருவன் அடித்து நொறுக்கி, கொலை மிரட்டல் விடுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

செங்குன்றம் சாலையில் காமேஷ் என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ரௌடி “வாட்டர் வாஷ்” குமார் என்பவன், உணவகத்துக்குச் சென்று ஓசியில் பிரியாணியும் மாமூலும் கேட்டுள்ளான்.

காமேஷ் தர மறுக்கவே, கையோடு கொண்டு சென்றிருந்த பட்டாக் கத்தியால் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கிய வாட்டர் வாஷ் குமார், கொலை மிரட்டலும் விடுத்துள்ளான். அவனைப் பார்த்து பயந்து, காமேஷும் கடை ஊழியர்களும் வெளியே ஓடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சம்பவம் தொடர்பாக புகாரைப் பெற்று குமாரை தேடி வந்த போலீசார், விநாயகபுரம் பகுதியில் வைத்து, கூட்டாளி கோபி என்பவனுடன் அவனை கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments