பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய உத்தரவு
பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், பாட்டில் குடிநீர் விநியோகிக்கும் நிறுவனங்கள் உரிய உரிமம் பெற்றிருக்க வேண்டும், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ல் வகுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
20 லிட்டர் கேன்களில் லேபிள்கள் தெளிவாக ஒட்டப்பட்டிருக்க வேண்டும் எனவும், உற்பத்தி செய்த பின் அதன் தரத்தை ஆய்வு செய்த பிறகே நுகர்வோருக்கு விநியோகம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாட்டில் குடிநீரை வாங்கி அருந்தும் மக்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை உற்றுநோக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள உணவு பாதுகாப்புத்துறை, தரக்குறைபாடு தொடர்பான புகார்களை 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
Comments