உக்ரைன் தலைநகர் கீவ்வில் போருக்கு மத்தியில் பிறந்த பெண் குழந்தை
போர்க்களமாக மாறியிருக்கும் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் உயிருக்கு பயந்து மெட்ரோ சுரங்கத்தில் பதுங்கியிருந்த கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
உக்ரைன் தலைநகர் கீவ்வை சுற்றி வளைத்த ரஷ்ய படைகள், தொடர்ந்து ஏவுகணை மற்றும் பீரங்கி தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றன. ஆங்காங்கே குண்டுகள் வீசப்படுவதால் மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள சுரங்கப்பாதைகளிலும், பதுங்குக் குழிகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலையில், கீவ்-வில் உள்ள மெட்ரோ சுரங்கம் ஒன்றில் தஞ்சமடைந்திருந்த 23 வயதான நிறைமாத கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுச் சென்ற உக்ரைன் போலீசார், பெண்ணுக்கு உதவினர். சுரங்கத்திலேயே அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் தாயும் சேயும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது இருவரும் நலமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments