அமெரிக்கா ராணுவ ரீதியாக நடவடிக்கை எடுக்குமா என்று கவனித்து வரும் சீனா
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ள நிலையில், அமெரிக்கா ராணுவ ரீதியாக நடவடிக்கை எடுக்குமா என்று சீனா கவனித்து வருகிறது.
தைவான் மீது நாளை சீனாவும் படையெடுப்பதற்கான சூழ்நிலையை இந்தப் போர் உருவாக்கியுள்ளது. தைவான் மீது சீனாவின் போர் விமானங்கள் பறப்பது குறித்து ஆசியாவே கவலை கொள்ளும் சூழல் நீடித்து வருகிறது.
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளை அனுப்பினால் நாளை தைவானுக்கும் அந்த நிலை உருவாகும் என்று சீனா கருதுகிறது. ஆயினும் இரு சூழ்நிலைகளும் வெவ்வேறு என்றும் தைவான் உக்ரைன் போன்றது அல்ல என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உக்ரைனை விடவும் தைவானுடன் அமெரிக்காவுக்கு கூடுதலான நட்புறவு இருப்பதும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
Comments