ஐரோப்பாவுக்கு ரஷ்யா பதிலடி.. ராக்கெட் ஏவ ஒத்துழைக்காது..!

0 2874

ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்ததற்குப் பதிலடியாக பிரெஞ்ச் கயானாவில் இருந்து ராக்கெட் ஏவுவதில் ஒத்துழைப்பை நிறுத்திக் கொள்வதாகவும், தொழில்நுட்பப் பணியாளர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது.

தென்னமெரிக்காவில் பிரெஞ்சு ஆட்சிப்பகுதியான பிரெஞ்ச் கயானாவில் கொரு என்னுமிடத்தில் நிலடுக்கோட்டுப் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் உள்ளது. இந்த ஏவுதளத்தை மேம்படுத்தவும், அங்கிருந்து ராக்கெட்டுகளை ஏவவும் ஐரோப்பிய விண்வெளி முகமையும், ரஷ்யாவின் விண்வெளி முகமையான ரோஸ்காஸ்மோசும் உடன்பாடு செய்துள்ளன.

அதன்படி மேம்படுத்தப்பட்ட ஏவுதளத்தில் இருந்து 2011ஆம் ஆண்டு முதல் இதுவரை ரஷ்ய ஒத்துழைப்புடன் 27 ராக்கெட்டுகள் செயற்கைக் கோள்களுடன் விண்வெளிக்கு ஏவப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று மட்டுமே தோல்வியடைந்துள்ளது. வரும் ஏப்ரல், செப்டம்பர், அடுத்த ஆண்டு பிப்ரவரி ஆகிய மாதங்களில் மூன்று ராக்கெட்டுகளை ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது.

 இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தன. இதற்குப் பதிலடியாக பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரு ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் ஏவுவதில் ஒத்துழைப்பை நிறுத்திக் கொள்வதாகவும், தொழில்நுட்பப் பணியாளர்களைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் ரஷ்ய விண்வெளி முகமையான ரோஸ்காஸ்மோஸ் அறிவித்துள்ளது.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments