உக்ரைன் படைகளை ரஷ்யாவிடம் இருந்து தான் வாபஸ் பெற சொன்னதாக வதந்திகள் பரவி வருகிறது ; உக்ரைன் அதிபர்

0 1956
உக்ரைன் படைகளை ரஷ்யாவிடம் இருந்து தான் வாபஸ் பெற சொன்னதாக வதந்திகள் பரவி வருகிறது

உக்ரைன் படைகளை ரஷ்யாவிடம் தான் வாபஸ் பெற சொன்னதாக வதந்திகள் பரவி வருவதாகவும், அதில் உண்மை இல்லை எனவும் கூறி உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள செல்ஃபி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் தான் தலைநகரில் தான் இருப்பதாகவும், நாங்கள் ஆயுதங்களை கீழே போடப்போவதில்லை. நாங்கள் எங்கள் நாட்டை காப்போம், உண்மையே எங்கள் ஆயுதங்கள் எனவும் அவர் கூறியுள்ளார். கூட்டணி நாடுகள் தற்போது ஆயுதங்களை வழங்கி உதவி வருவதாகவும் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

முன்னதாக மற்றொரு வீடியோ ஒன்றில் பேசியிருந்த விளாடிமிர் ஜெலன்ஸ்கி, இன்று தலைநகர் கீவ்வை ரஷ்ய படைகள் சுற்றிவளைத்து தாக்கி கைப்பற்றும் எனவும், நமது சுதந்திரத்தையும், நாட்டையும் நாம் தான் பாதுகாக்க வேண்டும் எனவும் உருக்கமாக பேசியுள்ளார்.

இதனிடையே, பதற்றம் நிறைந்து காணப்படும் தலைநகர் கியவ்-வில் இணையதள சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments