தேசிய நெடுஞ்சாலை-44 விரிவாக்கப் பணியின் ஒரு பகுதியாக ரூ 300 கோடி செலவில் கட்டப்பட்ட மிக நீளமான பாலம்
ஜம்மு காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலை-44 விரிவாக்கப் பணியின் ஒரு பகுதியாக சுமார் ஒன்று புள்ளி 2 கிலோமீட்டர் தூரத்துக்கு புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.
இது ராம்பன் மாவட்டத்துக்கு மிகப்பெரிய வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். சுமார் 300 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மிகப்பெரிய இந்த பாலத்தால் ஜம்மு -ஸ்ரீநகர் சாலையில் விபத்துகள் குறையும், போக்குவரத்து நெரிசல்கள் நீங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Comments